துணை முதல்வரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்!

https://www.namnadu.info/2019/08/blog-post_8.html?m=1#more

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் மணிகண்டன் இனி முதல்வரை சந்திக்க போவதில்லை என நேற்று மதுரை விமான நிலையத்தில் பேட்டி கொடுத்தார். இந்நிலையில் மதுரையில் இருந்து சென்னை சென்ற அவர் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பு பற்றி ராமநாதபுரம் அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம். “முதல்வரை சந்திக்க முடியாது என்று வெளிப்படையாக மணிகண்டன் அறிவித்துவிட்ட நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு, ‘உங்களை பார்க்க வேண்டும் ‘என்று கேட்டிருக்கிறார். வீட்டுக்கு வாங்க என்றும் பன்னீரும் சொல்ல ஓ.பன்னீர் வீட்டிற்கு நேற்று சென்றுள்ளார் அமைச்சர் மணிகண்டன். அப்போது கேபிள் டிவி கழக தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் திணிக்கப்பட்டது எப்படி என்றும் தான் முதல்வரால் புறக்கணிக்கப்பட்டது பற்றியும் பன்னீரிடம் விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட துணை முதல்வர் அமைச்சரவை மாற்றம் பற்றி தனக்கே சிறிது நேரம் முன்புதான் தெரிய வந்தது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த விஷயத்தில் மணிகண்டனை முழுமையாக ஆதரிக்க விரும்பவில்லை பன்னீர். ஏனெனில் தர்ம யுத்தத்தின் போது தன்னை இணைத்துக் கொண்டு மணிகண்டன் செயல்படுவார் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்போது மணிகண்டன் பன்னீரை ஆதரிக்கவில்லை. அதை மனதில் வைத்துகொண்டு பன்னீர் இப்போது காய் நகர்த்தி வருகிறார்” என்கிறார்கள்.