செப்டம்பர் 24 அன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவில் பைடன் குடும்பப் பெயர் தொடர்பான சில ஆவணங்களைக் கொண்டு வந்ததாகக் கூறினார்.

இதற்கு, பைடன் சிரித்துக்கொண்டே நாம் உறவினர்களா? என்று கேட்டார். பதிலுக்குப் பிரதமர் மோதி சிரித்துக்கொண்டே “ஆம்” என்றார். இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு செய்தியை ட்வீட் செய்த பாகிஸ்தானின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஹமீத் மிர், “நரேந்திர மோதி பைடனின் குடும்ப உறவுகளின் ஆவணங்களை அவரிடமே ஒப்படைத்தது நல்லது. அதே போல், இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களின் குடும்ப உறவுகளையும் கண்டுபிடித்து இந்திய பிரதமர் பெருமைப்படலாம்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுபோன்ற மற்றொரு சம்பவம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்பானது. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், துருக்கி அந்நாட்டு அதிபர் எர்துவான் பாகிஸ்தானுக்குச் சென்றபோது, ​​ கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் “துருக்கியர்கள் 600 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தனர்” என்று பெருமையுடன் கூறினார்.

அதற்கு இம்ரான் கான், “உங்கள் வருகையால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம், ஏனென்றால் பல நூற்றாண்டுகளாக துருக்கியுடன் எங்களுக்கு உறவு உள்ளது என்பதை எங்கள் சமூகம் புரிந்துகொள்கிறது. துருக்கியர்கள் 600 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தனர். இந்தியாவில் பைடன் என்ற குடும்பப்பெயரைப் பற்றிக் கூறிய அதிபர் பைடன், “ஜார்ஜ் பைடன் என்ற ஒரு நபர் கிழக்கிந்திய தேநீர் நிறுவனத்தில் கேப்டனாக இருந்ததாக நான் அறிந்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்த அதே கிழக்கிந்திய கம்பெனி பற்றித் தான் அவர் குறிப்பிட்டார்.

By Anna